அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை,கதறும் பெற்றோர்கள்.

thumb_upLike
commentComments
shareShare

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை,கதறும் பெற்றோர்கள்.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்த சிவ வேணி மைந்தன் மற்றும் மாலதி என்ற தம்பதியருக்கு லக்சன் என்ற இரண்டரை வயது மகன் உள்ளான்.இக்குழந்தைக்கு ஒரு வயது இருக்கும்போதே உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெற்றோர்கள் குழந்தையை சென்னை எழும்பூர் மருத்துவமனையில் பரிசோதித்தபோது,ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி "முதுகெலும்பு தசைநார் வலுவிழுப்பு என்ற அரிதான நோய் உள்ளதென்று தெரிய வந்துள்ளது இதையடுத்து மருத்துவர்கள் ,

குழந்தையை குணமாக்க மருந்து வெளிநாட்டில் இருந்து தான் வர வைக்க வேண்டும் அதற்கான செலவு 16 கோடி ஆகும் என கூறி உள்ளனர்.மேலும் நுரையீரல் அழுத்தப்பட்டு மூச்சு விடவும் மற்றும் உணவு உண்பதற்கும் பெரிதளவில் சிரமப்படும் குழந்தையை,பெற்றோர்கள் எப்படியாவது குணமாக்க வேண்டும் என மாவட்டர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இன்னும் நாலு மாதத்திற்குள் குழந்தைக்கு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் குழந்தை உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு விடும் என கண்ணீர் மல்க கதறிய தாய்.அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள் என யாராவது தன்னுடைய மகனை காப்பாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

AvalGlitz in Social Media
Share to your pages!
Close