விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை சுவேதா மற்றும் மோஹனா அவர்கள்,அவள் க்ளிட்ஸ் யுடுயுப் சேனலில் அளித்த பேட்டியில்,
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.அதில் நடிகை சுவேதா தமிழ்செல்வி என்னும் கேரக்டரில் நடித்து வருகிறார்.அவருக்குமே இந்த சீரியல் ஒரு புதிய பரிணாமமாக இருக்கிறது,ஏனெனில் இன்ஸ்டா ரீல்ஸ் முதலாக ஆரம்பித்து பிறகு சின்ன சின்ன குறும்படத்தில் நடித்து தற்போது இப்படியான ஒரு சேனலில் ஹீரோயின் ரோல் கிடைத்து அதை சிறப்புற செய்து வரும் நடிகை சுவேதாவிற்கு இது ஒரு நல்ல அடுத்தகட்டமாக அமைந்தன.
இந்த சீரியலில் இடம்பெறும் கதைப்படி,தமிழ்செல்விக்கு பள்ளி பருவம் முடிக்கும் நேரத்தில் கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள்.அதே சீரியலில் கதாநாயகியை ஒருதலையாக காதலித்து வந்த கதாநாயகன்.அவரது பெற்றோரும் இதற்கு சம்மதிக்கிறார்கள்.மேலும் இதில் சுவேதா கதாபாத்திரம் ஒரு பாவமான பெண்ணான தோற்றம்.முக பாவனை,பேச்சு அனைத்தும் இருக்கும்.
21 வயதே ஆகும் சுவேதா ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சின்னதாக ஒரு ரோல் நடித்திருப்பார்.ஆனால் அது பெரிதாக வெளியில் தெரியவில்லை.
ஆனால் அந்த சீரியலின் கதாநாயகியே இந்த சீரியலுக்காக என்னை விளம்பரப்படுத்தியது எனது மிகவும் சந்தோஷமாக இருந்தது என ஒரு நேர்காணலில் சுவேதா கூறி இருக்கிறார்.மேலும் இந்த சீரியலின் நடிகைகள் சுவேதா மற்றும் மோஹனா கூறிய சீரியலின் களிப்பூட்டும் தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.