உழைக்கும் அனைத்து கரங்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் !

thumb_upLike
commentComments
shareShare

உழைக்கும் அனைத்து கரங்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் !

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உழைப்பாளர் தினம் இன்று மே 1 2024 அன்று அனைத்து உழைக்கும் மனங்களும் தனக்கே நன்றி சொல்லி கொண்டாடும்.இந்த விடுமுறை நாளானது சர்வதேசமயமாக்கப்பட்டு இருக்கின்றது மற்றும் பல நாடுகள் அணிவகுப்புகள், காட்சிகள் மற்றும் நாட்டுப்பற்று மற்றும் தொழிலாளர் சம்பந்தமான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலநாள் கொண்டாட்டங்களைக் கொண்டிருந்தன.

பெர்முடா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொழிலாளர் தினத்தை செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் கொண்டாடுகின்றன.சால்வேனியா, செர்பியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் மே 2 ஆம் தேதியும் தேசிய விடுமுறை நாளாக உள்ளது.

இந்தியா மே 1, 1927 இல் இருந்து தொழிலாளர் வாரத்தைக் கடைபிடிக்கத் தொடங்கியது. இது பல்வேறு தொழிலாளர் அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட ஊர்வலங்களுடன், பொது விடுமுறையாக கொண்டாடப்படுகின்றது.

என்னதான் எல்லாருக்குமே ஆயிரம் பிரச்சினை வாழக்கையில் இருந்தாலும்,தினமும் வேலைக்கு போகுவேன் சம்பாதிப்பேன் என் உடல் இந்த மண்ணில் சாயும் வரை நான் உழைத்து கொண்டே வாழ்வேன் என ஓடி கொண்டிருக்கும் எல்லா உழைப்பாளர்களுமே இன்றைய நாளில் பெருமை பட வேண்டும்.அதிலும் விவசாயம் செய்து உலக மக்கள் அனைவர்க்கும் சோறூட்டும் விவசாய பெருமகனுக்கு இந்நன்னாளில் நன்றி சொல்ல கடமைப்பட்டுளோம்.

சென்னை திருவான்மியூரில் தான் முதல் முதலாக உழைப்பாளர் தினத்தை கொண்டாடி கோடி ஏற்றப்பட்டது.பொதுவுடைமையாளர் சிங்காரவேலரே முதல் முறையாக சென்னை மெரினாவில் உழைப்பாளர்க்காக பொது கூட்டத்தை நடத்தியவர்.இவர் போன்ற சமூக சீர்திருத்த வாதிகள் இருந்ததால் தான் 12 மணி நேரமாக இருந்த நம் வேலை பணி நேரம் 8 மணி நேரமாக மாற்றப்பட்டது.இந்நிலைக்கு வந்த நாம் இன்னும் பல முன்னேற்றங்களை காண இன்றைய இளைஞர்களே சாட்சி.

குருதியை சிந்தி கனவை மூச்சாக்கி நாளைய எதிர்காலத்தை நமதாக்க இன்று பாடுபடும் மற்றும் என்றும் மனம் தளரா தரணியாக புகழ் சேர வளர்க்க மேலும் வளர மனதார வாழ்த்துகிறோம் .

AvalGlitz in Social Media
Share to your pages!
Close