வேல்ஸ் குழும தலைவர்களின் துணை தலைவராக மற்றும் இளம் ஆற்றல்மிக்க சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் மலிவான கல்வி வழங்கிய மேலும் மேலாண்மை நிபுனரான திருமதி ப்ரீத்தா கணேஷ் அவர்கள் சமீபத்தில் அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ,
எல்லோரும் உபயோகிக்கிற ஒரு வார்த்தை.நானும் கண்டிப்பா அதை சொல்லுவேன் I'm a young' .எல்லா துறையிலும் ஆண் ஆதிக்கம் இருக்கு.நான் அதை பார்த்து இருக்கிறேன்.தற்போது உள்ள இளம் சமுதாயம் என்னை பார்க்கிறார்கள்.அதற்கேற்றாற்போல் என்னுடைய நடவடிக்கை மற்றும் நான் எடுக்கும் முடிவு இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்.
இப்போ உள்ள இளம் வயதினர் சமூக வலைத்தளத்தில் அவர்களை நல்லாவே வெளிப்படுத்திக்குறாங்க.அது ரொம்பவே நல்ல விஷயம்.அதை சிலர் பாசிட்டிவ்வா எடுத்துப்பாங்க.சிலர் பேர் நெகடிவ்வா எடுத்துப்பாங்க.அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
நம்ம நம்மள நிரூபித்து கொள்கிறோம் .நம்ம சிறிய வயதாக இருந்தாலும் அதிக வயதாக இருந்தாலும் எடுத்து உடனே யாரும் நம்மை ஏற்று கொள்ளமாட்டார்கள்.நம்மளுடைய அந்த முக்கியத்துவத்தை நாம் மற்றவர்களுக்கு நிரூபிக்கும்போது தானாகவே நமது குரல் பலமாக ஒலிக்கும்.
நான் ஒரு கட்டத்தில் மிகவும் பொறுமையாக என்னுடைய விடா முயற்சியை போட்டு கொண்டே இருந்தேன்.நிறைய படித்தேன் மேலும் ஆற்றல்மிக்க அறிவார்ந்த மக்களை சந்தித்து அவர்களுடைய ஆலோசனையை பெற வேண்டி இருந்தது.நான் என்னை மேம்படுத்தி கொண்டேன்.நிறைய கற்று கொண்டேன்.
அதனாலேயே என்னால் இது போன்ற ஒரு வெற்றிகரமான இடத்தை அடைய முடித்தது.ப்ரீத்தா கணேஷ் அவர்களின் வெற்றியின் ரகசியம் மற்றும் சுவாரசியமான பகிருதலை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.