1992ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பிறந்த பாலக் முச்சல் ஒரு இந்திய பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவர்.இதய நோய்க்கான மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி தேவைப்படும் ஏழை குழந்தைக்காக நிதி திரட்டுவதற்காக பாடகி பாலக் முச்சலும் அவரது தம்பி பாலாஷ் முச்சலும் இனைந்து இந்திய மற்றும் வெளிநாடுகளில் மேடை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
இவர் திரைப்படங்கள் மற்றும் பிற இந்திய திரைப்படங்களுக்காக பின்னணி பாடகராகவும் பணியாற்றுகிறார்.திரைப்படத்தின் கவுன் துஜே என்ற பாடலை அவர் இசையமைத்தது ரசிகர்கள் மற்றும் இசைத்துறையின் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து அவருக்கு அதிக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
முதன் முதலில் முச்சல் தனது ஏழு வயதில்,இறந்த இந்திய வீரர்களின் குடும்பத்திற்காக பாடி நிதி திரட்டினார்.1999இல் ஒடிசாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாடி நிதி திரட்டி அளித்தார்.
இவர் ஒரு நாள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் ஏழை குழந்தைகளின் அழுக்கான ஆடைகளையும் அவர்களையும் பார்த்து இவர்களுக்காக இனி தன் குரலை பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தார்.அன்றிலிருந்து இன்று வரை ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக தன்னுடைய குரலை தியாகம் செய்து கொண்டு உள்ளார்.
சமீபத்தில் பாலக் முச்சல் அளித்த பேட்டியில்.'எனது இசைக்கச்சேரியின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இந்த நல்ல காரியத்தை செய்து வருகிறேன்.இன்னும் 413 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.'
வெறும் 32 வயதே ஆகும் பாடகி பாலக் முச்சல் இதுவரை 3000 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு காரணமாக இருக்கிறார்.சமூக வலைத்தளங்களில் பலர் இவரை நெகிழ்ச்சியாக பாராட்டி வருகின்றனர்.