பாடகி ஸ்ரீநிஷா வாழ்க்கையின் முக்கியமான நபர் ஹிப் ஹாப் ஆதியா ?

thumb_upLike
commentComments
shareShare

பாடகி ஸ்ரீநிஷா வாழ்க்கையின் முக்கியமான நபர் ஹிப் ஹாப் ஆதியா ?

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற மற்றும் இளையராஜா இசையில் வெளிவந்த அம்மா கணக்கு திரைப்படத்தில் பின்னணி பாடகியுமாக அறிமுகமான ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அது பிரபலமடைந்து,

பிறகு யூடுயுப்பில் 85 மில்லியன் பார்வையாளராகளை பெற்று கண்ண வீசி பாடல்,அடி பெண்ணே பாடல் மற்றும் கண்ணோரம் போன்ற பாடல்களால் அனைவராலும் அறியப்பட்டார்.தற்போது அவர் நமது அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலில் அளித்த பேட்டியில்,

அச்சச்சோ பாடலின் ரெகார்டிற்கு சென்றேனே தவிர நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் அந்த பாடல் என்ன படம் என்று கூட எனக்கு தெரியாது.மேலும் அந்த பாடலுக்கு பேய் காட்சிகள் இருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் அப்படி இல்லாமல் இருந்தது.சோசியல் மீடியாவில் அந்த பாடல் வெளிவந்த பிறகு தான் எனக்கு புரிந்தது அந்த பாடலை நான் மட்டுமில்ல ரேஷ்மாவும் பாடி இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

மேலும் ஹிப் ஹாப் ஆதி அண்ணா என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர் ஆவார்.எனக்கு திருப்பத்தை கொடுத்த படம் என்றால் அவை விளம்பர இடைவெளி படம் தான். எங்கு பார்த்தாலும் நான் பாடிய அந்த அச்சச்சோ பாடல் கேட்பது மற்றும் அதற்கு வந்த ரெஸ்பான்ஸ் எல்லாமே மிகவும் மகிழ்வித்தது.கடைசியாக ஒரு முறை இந்த பாடலின் திருத்தத்திற்காக சென்றபோது தான் எனக்கு தெரிந்தது பாடல் அரண்மனை4 படம் என்பதே தெரிந்தது.

மேலும் இதை இப்படி பாட வேண்டும் இப்படி பாட கூடாது என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை நான் மிகவும் சந்தோஷமாக என்னுடைய வசதிக்கேற்றாற்போல் பாடுவதற்கு ஏற்ற சுதந்திரத்தை கொடுத்தனர்.ரொம்பவே சந்தோஷமாக இருக்கு மற்றும் இசை புயல் இளையராஜா அவர்களின் இளங்காத்து வீசுதே பாடல் என்னுடைய பிடித்தமான லிஸ்ட் ஆகும் .

அச்சச்சோ பாடலில் தமன்னா மற்றும் ராஷிக் கண்ணா இனைந்து நடித்த அந்த பாடலிலும் இருந்தது எனக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது.அந்த பாடலுக்காக எனக்கு வந்த வாழ்த்துக்கள் அதிகம்.இது போன்று பாடகி ஸ்ரீநிஷா பாடிய பல சுவாரசியமான உரையாடலை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்

AvalGlitz in Social Media
Share to your pages!
Close