வாம்பயர் ஃபேஷியல் செய்வதன் மூலம் ஏற்படும் எச்.ஐ.வி! என்ன காரணம் ?

thumb_upLike
commentComments
shareShare

 வாம்பயர் ஃபேஷியல் செய்வதன் மூலம் ஏற்படும் எச்.ஐ.வி! என்ன காரணம் ?

 

உடலின் இரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்து எடுத்து,அதை சீராக்கி நம் உடலில் செலுத்தும் முறையே வாம்பயர் ஃபேஷியல் எனப்படும்.இந்த வழியில் ஊசி போடுவதன் மூலமாக சருமத்தில் உள்ள செல்களை தூண்டி ஆரோக்கியமான மற்றும் இளமையான தோல்களை உருவாக்கலாம் என நம்பப்படுகிறது.

இதில் உள்ள பிரச்சினையே இந்த வாம்பயர் ஃபேஷியல் செய்த நபருக்கு எச்.ஐ.வி உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த சிகிச்சை செய்து முடித்தவருக்கு எச்.ஐ.வி உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இது போன்ற விளைவுக்கு என்ன காரணம் என்பதை விரிவாக காண்போம் .

இதன் முக்கிய பயனே முகத்தை திறம்பட பொலிவாக்குகிறது.நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள
குறைக்கும்.மேலும்


1.துளைகளைக் குறைக்கிறது
2.முகப்பரு தழும்புகள் குணப்படுத்தும்
3.தோல் பொருட்களின் உறிஞ்சுதல் விகிதத்தை மேம்படுத்துதல்
4.சருமம் புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்கும்.
5.தோல் அமைப்பை மேம்படுத்தும்.
6.கருவளையங்களை சரி செய்கிறது.
7.சருமத்திற்கு பளபளப்பும் பிரகாசமும் கிடைக்கின்றன.
8.தோல் நிறமி குறைகிறது.
லேசர் போன்ற சிகிச்சைக்கு பதிலான எளிமையான முறையே இந்த வாம்பயர் ஃபேஷியல் முறை ஆகும்.

இந்த சிகிச்சை முறை வலியற்றது.இதை செய்து முடித்த பிறகு கொஞ்சமாக வீக்கம் மற்றும் உராய்ப்பு தன்மை இருக்கும்.முகம் சிறிது சிவந்து காணப்படும்.இதற்கெல்லாம் தயாராக இருப்பவர்களே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

இந்த சிகிச்சையை எத்தனை முறை செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் பரிந்துரைப்பார்.வழக்கமாக மூன்று அல்லது நான்கு முறை இருக்கும்.

எனவே முகத்தை வசீகரமாக வைத்து கொள்ள மேற்கொள்ளப்படும் இந்த முறை எந்த காரணத்தினால் எச்.ஐ.வி நோயை ஏற்படுத்துகின்றன என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது.மருத்துவர்கள் பலர் இது குறித்து ஆராயுகின்றனர்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் ஸ்பா ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஸ்பாவில் வேம்பயர் ஃபேஷியல் செய்த பெண் எச்ஐவியால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு மேலும் 2 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டனர்.அதாவது ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தி இருப்பதாலே இந்த பிரச்சனை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


 

AvalGlitz in Social Media
Share to your pages!
Close